21 Dec 2011

மூலமும் உரையும்-01


ஆம், முதன் முதலில் எனது கற்பனைத் திறன் ஒரு ரேஷன் கடையில் தான் ஆரம்பமானது!

நான் இளைய குயிலாக வாழ்ந்த காலம் அது!

எதோ ஒரு பொருள் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் அங்கே கண்ட ஒரு காட்சி எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது! கடைகாரர் பில் போட்டுக் கொடுக்கும் போது, அவர் எழுதுவதெல்லாம் அடுத்தப் பேப்பரிலும் பதிவாகிக் கொண்டிருந்தது! அதே பேப்பரின் பின் பக்கத்திலும் பதிவாகியது!

இதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு ஒரு வேடிக்கையாகவே போய்விட்டது. பள்ளிக் கூடம் அருகில் தான் ரேஷன் கடை இருந்தது. அதனால் எனக்கு அது மிகவும் வசதியாகப் போய்விட்டது. இடைவேளை கிடைக்கும் போதும், மதிய சாப்பாட்டின் போதும் நான் ஓடிச் சென்று அவர் எழுதுவதை  வேடிக்கையை பார்த்து ரசித்தேன்.

என் தந்தைக்கு எங்கள் ஊரில் மிகுந்த செல்வாக்கு இருந்ததனால், அந்தப் பகுதியில் உள்ள பலரும் எனக்கு அறிமுகமானவர்கள் தான். ரேஷன் கடையில் வேலை பார்ப்பவர் கூட, நான் யார் என்பதை தெரிந்ததும், அருகில் அழைத்து வைத்துக் கொண்டு பாசத்தோடு விசாரித்தார்.

நானோ, எப்படியாவது அந்த கார்பன் பேப்பரை எடுத்து விடவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன். ஆனால் முடியவில்லை. நான் கேட்டால் கூட அவர் கொடுத்திருப்பார். ஆனால் எனக்கு வெளிப்படையாக கேட்பதற்கு பயமாக இருந்தது. ஏனென்றால், நான் அதை எடுக்க முயற்சிப்பது ஒரு தவறான செயலுக்காக...

நாம் ஏதாவது ஒரு தவறு செய்ய நினைத்து விட்டால், அல்லது செய்து விட்டால், நமக்கு எப்போதும் அதைப் பற்றிய பயம் இருக்கத்தானே செய்யும்!
"குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும்" என்பது போல.

எனக்கும் அந்தப் பயம் தான் தொற்றிக் கொண்டது!

தொடரும்...

0 Comments: